Posts

Showing posts from January, 2020

ஆயிரம் ஆண்டுகள் வாழும் கையெழுத்து

Image
இந்திய அரசியலமைப்பின் வரைவு அச்சிற்கு தயாராக இருந்த போது ஜவஹர்லால் நேரு ஶ்ரீ பிரேம் பிஹாரியிடம் கையெழுத்துப் பிரதி ஒன்றினை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது "எனக்கு ஒரு காசு கூட வேண்டாம். கடவுளின் கருணையால் அனைத்தும் வாய்க்கப்பெற்றுள்ளேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளேன்" எற்று பிரேம் பிஹாரி கூறினார். இருந்தாலும் அவருக்கு நேருவிடம் கேட்பதற்கு ஒன்று இருந்தது. கையெழுத்துப் பரதியின் அனைத்து பக்கங்களிலும் அவரின் பெயர் இருக்க வேண்டும் எனவும் கடைசி பக்கத்தில் அவர் பெயருடன் அவரது தாத்தாவின் பெயரும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதற்கு ஒப்புதலும் அவருக்கு கிடைத்தது. காலிகிராப்பிஸ்டுகளாக (calligraphists) இருந்த குடும்பத்தில் பிறந்த பிரேம் பிஹாரி சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்தார். தேர்ந்த காலிகிராப்பிஸ்ட்டான தனது தாத்தா "மாஸ்டர் ராம் பர்ஷத்ஜி சக்சேனா" மூலம் வளர்க்கப்பட்ட அவர் அந்த கலையை தாத்தாவிடம் இருந்து கற்றுக் கொண்டு பிற்காலத்தில் இந்திய அரசியலமைப்பின் கையெழுத்துப் பிரதியை எழுதித்தர நேருவே வந்து கேட்கும...