Posts

Showing posts from September, 2019

ஹெமிங்வே கவிதைகள்

Image
வயதின் நிர்பந்தம் வயது நம்மை நிர்பந்திக்கிறது பாடவும் நாவை அறுத்தெறியவும் வயது நம்மை நிர்பந்திக்கிறது வழிந்தோடவும் முட்டுக்கட்டை இடவும் வயது நம்மை நிர்பந்திக்கிறது ஆடவும் இரும்பு கால்சாராய் மாட்டிக் கொள்ளவும் இறுதியாக வயது நமக்கு அளிக்கிறது அது நிர்ப்பந்தித்ததை கைதிகள் சிலர் சங்கிலிகளில் வந்தனர் வருத்தமற்று ஆனால் சோர்வாக மிக சோர்வாகவும் தடுமாற்றத்துடனும் சிந்தனையும் வெறுப்பும் அற்று  யோசிப்பதும் சண்டையிடுவதும் அற்று தோற்பதும் நம்பிக்கை கொள்வதும் அற்று நீண்ட போரின் முடிவுகள் சாவையும் எளிதாக்கின தமிழில்: வேல்முருகன்

சாவடி

ஒரு வருடமாகியும் கன்னடம் ஒழுங்காக வரவில்லை. சமையலுக்கு வைத்திருந்த  ஆளுக்கு புரியாத தமிழ் சொற்களாலும், முக பாவனைகளாளலும் சீக்கிரம் சமையல் ஆகட்டும் என்பதை பணித்துக் கொண்டிருந்தான். பெங்களூரில் தனது கம்பெனியில் வேலை செய்யும் இருவருடன் சேர்ந்து ஒரு பிளாட்டில் வசிக்கிறான். சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சம்பளமும் வேலை நேரமும். "பதினோரு மணிக்கு தானடா ரயில் அப்புறம் ஏன் குதிச்சுட்டு இருக்க  சும்மாவே அவன் உப்பு,காரம் எல்லாம் ஒழுங்கா போட மாட்டான்" என்றான் முரளி . சரவணனின் மனதிலிருந்த ஆவலே அவன் செயலில் பரபரப்பாய் வழிந்தது. மூன்று வருடங்கள் கழித்து தான் ஆறாவது வரை படித்த சொந்த ஊருக்குச் செல்ல இருக்கிறான். நாம் காணச் செல்லும் இடங்களையும் பயணங்களையும் விட அவற்றைப் பற்றிய கற்பனைகளே ஆர்வம் ஊட்டுவதாக உள்ளன.  ஒன்பது மணிக்கெல்லாம் சமையல் முடிந்தும் சாப்பிடாமல் அதை பார்சல் செய்து கொண்டான். ஊருக்கு செல்ல வேண்டிய பைகள் நேற்று இரவில் இருந்தே தயார் நிலையில் நின்று கொண்டிருந்தன. அதில் ஒன்றை திறந்து சாப்பாட்டு பார்சலை திணித்தான். சரவணன் படுத்தும் பாட்டில், முரளி கிக்கரை ஓங்கி ...