ஆயிரம் ஆண்டுகள் வாழும் கையெழுத்து
இந்திய அரசியலமைப்பின் வரைவு அச்சிற்கு தயாராக இருந்த போது ஜவஹர்லால் நேரு ஶ்ரீ பிரேம் பிஹாரியிடம் கையெழுத்துப் பிரதி ஒன்றினை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது
"எனக்கு ஒரு காசு கூட வேண்டாம். கடவுளின் கருணையால் அனைத்தும் வாய்க்கப்பெற்றுள்ளேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளேன்" எற்று பிரேம் பிஹாரி கூறினார்.
இருந்தாலும் அவருக்கு நேருவிடம் கேட்பதற்கு ஒன்று இருந்தது. கையெழுத்துப் பரதியின் அனைத்து பக்கங்களிலும் அவரின் பெயர் இருக்க வேண்டும் எனவும் கடைசி பக்கத்தில் அவர் பெயருடன் அவரது தாத்தாவின் பெயரும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதற்கு ஒப்புதலும் அவருக்கு கிடைத்தது.
காலிகிராப்பிஸ்டுகளாக (calligraphists) இருந்த குடும்பத்தில் பிறந்த பிரேம் பிஹாரி சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்தார். தேர்ந்த காலிகிராப்பிஸ்ட்டான தனது தாத்தா "மாஸ்டர் ராம் பர்ஷத்ஜி சக்சேனா" மூலம் வளர்க்கப்பட்ட அவர் அந்த கலையை தாத்தாவிடம் இருந்து கற்றுக் கொண்டு பிற்காலத்தில் இந்திய அரசியலமைப்பின் கையெழுத்துப் பிரதியை எழுதித்தர நேருவே வந்து கேட்குமளவிற்கு அதில் தேர்ந்தார்.
பார்ச்மெண்ட் ஷீட் எனப்படும் காகிதத்தோலில் நேரு கேட்டுக் கொண்டதற்கு இணங்க flowing italic styleஇல் எழுதப்பட்ட இந்த கையெழுத்துப் பிரதி ஆயிரம் ஆண்டுகள் வாழ்நாள் காலம் கொண்டது. ஆறு மாதங்களில் 251 பக்கங்களில் இதை எழுதி முடித்தார்.
இந்திய அரசியலமைப்பு குழு உறுப்பினர்களால் 24 ஜனவரி 1950 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கையெழுத்து பிரதி கையொப்பமான போது ஒருவர் தமிழில் கையொப்பமிட்டார். அவர் பெயர் வீரபாகு.
Comments
Post a Comment