ஹெமிங்வே கவிதைகள்
வயதின் நிர்பந்தம்
வயது நம்மை நிர்பந்திக்கிறது பாடவும்
நாவை அறுத்தெறியவும்
வயது நம்மை நிர்பந்திக்கிறது வழிந்தோடவும் முட்டுக்கட்டை இடவும்
வயது நம்மை நிர்பந்திக்கிறது ஆடவும்
இரும்பு கால்சாராய் மாட்டிக் கொள்ளவும்
இரும்பு கால்சாராய் மாட்டிக் கொள்ளவும்
இறுதியாக வயது நமக்கு அளிக்கிறது
அது நிர்ப்பந்தித்ததை
அது நிர்ப்பந்தித்ததை
கைதிகள்
சிலர் சங்கிலிகளில் வந்தனர்
வருத்தமற்று ஆனால் சோர்வாக
மிக சோர்வாகவும் தடுமாற்றத்துடனும்
சிந்தனையும் வெறுப்பும் அற்று யோசிப்பதும் சண்டையிடுவதும் அற்று
தோற்பதும் நம்பிக்கை கொள்வதும் அற்று
நீண்ட போரின் முடிவுகள்
சாவையும் எளிதாக்கின
வருத்தமற்று ஆனால் சோர்வாக
மிக சோர்வாகவும் தடுமாற்றத்துடனும்
சிந்தனையும் வெறுப்பும் அற்று யோசிப்பதும் சண்டையிடுவதும் அற்று
தோற்பதும் நம்பிக்கை கொள்வதும் அற்று
நீண்ட போரின் முடிவுகள்
சாவையும் எளிதாக்கின
தமிழில்: வேல்முருகன்

Comments
Post a Comment