ஒற்றை மரம்
காலி நிலம் அது
ஒரே ஒரு தென்னை மரம் மட்டும் நடப்பட்டது இப்போது அந்த இடம் தென்னந்தோப்பு
எல்லா மரங்களும் அந்த மரத்தை அண்ணாந்து தான் பார்க்கும்
சிறு காற்றிற்கு பயப்பட்ட மற்ற மரங்கள தைரியமாக நிற்க கற்றுக கொண்டது அதைப் பார்த்துதான்
ஆனால் ஒவ்வொரு முறை காற்றடிக்கும் போதும் அதிலிருந்து ஏதாவது ஒன்று இழந்து கொண்டே தான் இருக்கும் தேங்காய் இளநீர் குரும்பை தென்னை ஓலை ஏதாவது ஒன்று
ஒவ்வொரு இழப்பிற்குப் பிறகும் புதிதாக ஒன்று அதற்கு வந்து கொண்டேதான் இருக்கும்
அதைப்பற்றி அதற்கு கவலை இல்லை கண்டுகொள்வதுமில்லை
அதைப் பார்க்கும்போது சிறிய மரங்களுக்கு தான் கவலை
இப்பொழுது எந்த மரமும் அண்ணாந்து பார்க்க தேவையில்லை
இந்த மரத்திடமும் இழப்பதற்கு ஒன்றுமில்லை
சிறு காற்றுகள் இதை ஒன்றும் செய்வதில்லை
இப்பொழுது இதற்கு தேவை புயல் காற்று தான்
Comments
Post a Comment